Wednesday, August 1, 2007

தேவதைகளின் தேசம்

ஹோட்டலில் கொடுத்திருந்த கம்பளிக்குள் புகுந்து கொண்டு 12 மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். நண்பர்கள் கசகசவென்று பேசிக்கொண்டிருந்ததால் விழிப்பு வந்தாலும்; இப்படி அவர்கள் வெகுநேரமாய் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சொன்னார்கள். என்ன விஷயம் என்று கேட்டால் இவர்கள் மீண்டும் யானை பார்க்கப் போக, இந்த முறை யானைக் கூட்டத்தைப் புகைப்படம் எடுத்துவிட்டு வரும் வழியில் தனி யானை ஒன்று இவர்கள் துரத்தியதாகவும் அதனிடம் இருந்து தப்பித்து வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு பார்த்தால் தான் தெரிகிறது இவர்கள் யானையை பேக்ரவுண்டாக வைத்து இன்னொரு ஃபார்மேஷனை புகைப்படம் எடுக்க நினைத்திருக்கிறார்கள். யானைக்கு கோபம் வந்திருக்க வேண்டும்; துரத்தோ துரத்தென்று துரத்தியிருக்கிறது இவர்களை. என்னுடன் அறையில் இருந்த நண்பர்கள் இருவர் ராயல் சேலஞ்சை அலாக்காக அடுத்துவிட்டு; பறவையினங்கள் ஒன்றிரண்டைக் கடித்து குதிறிப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தான் நினைவில் வந்தது நேற்றிரவு இரவு உணவு சாப்பிடாதது. பின்னர் காலை உணவு சாப்பிட்டு விட்டு; பனாசுரா டேமிற்கு செல்லத் திட்டமிட்டோம்.

சுல்தான் பத்தேரியில் இருந்து சுமார் 30KM தூரத்தில் இருக்கிறது இந்த பனாசுரா டேம். இரண்டு மாதத்திற்கு முன்னால் அணையில் தண்ணீர் இல்லையென்று போட்டிங் சர்வீஸை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அணை நிரம்பியிருக்கும் வேளையில் போட்கள் வேலை செய்யாததால் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்துவிட்டுக் கிளம்பினோம். ஒரு நாள் முழுவதையுமே கூட அங்கே செலவிட விஷயங்கள் இருந்தாலும் இவர்களுடைய பயண முறை அங்கிருந்து வேகமாய் எங்களை நகரவைத்தது. பின்னர் திரும்பவும் சுல்தான் பத்தேரி வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு(சுமார் 4 மணி அளவில்) கேரளாவில் இருந்து கிளம்பினோம்.

மனம் முழுவதும் ரம்மியம் ஒட்டிக்கொண்டதைப் போன்ற ஒரு உணர்வு; அழகான ஊர் இன்னமும் இயற்கையை அழிக்காமல் மக்கள். கர்நாடக கேரள எல்லையைக் கடக்கும் பொழுது ஒரு விஷயம் புரிந்தது கிட்டத்தட்ட ஒன்றிரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் மக்கள் வெவ்வேறான மொழி பேசிக்கொண்டு; வித்தியாசமான அனுபவம். நிறைவான அனுபவங்களுடன் எங்கள் பயணம் மீண்டும் பெங்களூருவை நோக்கி பயணம். ஆறரை மணியில் இருந்து ஏழு, ஏழேகால் மணி வரை வண்டி ஓட்டுவது கடினம் இருட்டும் செட்டாகியிருக்காது வெளிச்சமும் இருக்காது. இந்த மக்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அவர்களுடைய வண்டி ஓட்டும் அனுபவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

வரும் வழியில் மைசூர் - பெங்களூர் சாலையில் Cafe Day ஒன்று உண்டு என்றும் அங்கே நிறுத்தி இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றும் ப்ளான். அருமையான ரோடு மைசூர் - பெங்களூர் ஹைவே. இன்னொரு நாள் என்னுடைய கீர போண்டாவில் போகும் உத்தேசம் உள்ளது தனியாக.

Cafe Dayல் சாப்பிட உட்கார்ந்த பொழுது உள்ளே பரபரப்பு என்னவென்று பார்த்தால் யாரோ ஒரு செலிப்ரட்டி வந்திருந்தார். எங்களுக்கும் போஸ்டர்கள் பார்த்து முகம் தெரிந்தாலும் யாரென்று தெரியவில்லை; சும்மா போய் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தான். கூட வந்த ஒரு தமிழ்நாட்டு நண்பர் அவரிடம் நேராய் சென்று "நீங்க செலிபிரட்டி என்று தெரிகிறது ஆனால் யாரென்று தெரியவில்லை. உங்களை இண்ட்ரொடியூஸ் செய்து கொள்ள முடியாமா எனக்கேட்க."

நபர் கொஞ்சமும் முகம் சுணுங்காமல்,

"நான் சிவராஜ்குமார் ராஜ்குமாரின் பையன்" என்று அறிமுகப்படுத்துக் கொண்டார். நம்மூரில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் ஒன்று வந்ததில்லையா அது உண்மையில் கன்னட படம் ஜோகி. கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன படம் அது; அதில் நடித்திருந்தவர் தான் இந்த சிவராஜ்குமார். பின்னர் இரண்டு ஸ்நாப்ஸ் எடுத்துக் கொண்டு அவருடைய பிரைவசியை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்யாமல் நகர்ந்து விட்டோம்.























மனுஷர் ரொம்பவும் கூல், நீங்க எல்லாம் எந்த ஊரு என்று கேட்டவர் மெட்ராஸ் என்று நண்பர் சொன்னதும் ப்ராப்பர் மெட்ராஸா என்று கேட்டார். ஏனென்றால் பொதுவாக நார்த் இண்டியாவில் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலே மெட்ராஸ் என்று சொல்லும் பழக்கம் உண்டு. உடனே நண்பர் ஆமாம் ப்ராப்பர் மெட்ராஸ் தான் என்று சொல்ல, நானும் பார்ன் அண்ட் ப்ராட்டப் இன் மெட்ராஸ் தான்; கோடம்பாக்கம் என்று சொல்லி எங்கள் பயணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். நம்மூரில் பச்சா பசங்க எல்லாம் படம் காண்பிக்கும் பொழுது சிவராஜ்குமார் எந்த வித பந்தாவும் இல்லாமல் நடந்து கொண்டது வியப்பாயிருந்தது. பெரும்பாலும் Cafe Dayல் யாரும் அவரை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும் அவரைப் பற்றி தெரிந்துதான் இருந்தது. பின்னர் சிக்கன் பர்கர், கோல்ட் காப்பி குடித்துவிட்டு பெங்களூர் வந்த பொழுது மணி இரவு 1.00.

------------------------------------

கேமெரா கண்களில் பதிவு செய்யாவிட்டாலும் மனதில் பதிவாகியிருந்தார்கள் கேரள பெண்கள். கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல தேவதைகளின் தேசமும் தான் ;-)

இந்தப் பயணத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஜல்லிக் குறிப்பு - கடவுளின் தேசம்

இன்னும் நிறைய படங்கள் - Wayanad photos

முந்தைய பகுதி - Tour de Wayanad

18 மறுமொழிகள்:

சொன்னது...

கேரள பெண்குட்டிகள் படங்கள் எங்கே

சொன்னது...

சேச்சி படங்கள் எங்க போச்சி?

சொன்னது...

அனானிகளா இதென்ன விளையாட்டு ;)

என்னைக் காலி செய்திருப்பார்கள் சேட்டன்கள் தெரியுமில்லையா?

சொன்னது...

தேவதைகளோட போட்டோவே போடாம அதென்னய்யா தேவதைகளின் தேசம்னு பதிவு போடுறது ஒத்துக்க முடியாது

சொன்னது...

ஐயாம் ய காம்பிளான் பாய்..
//*நீங்களும் சொல்லுங்க ஏதாச்சும் *//

சொன்னது...

உன்மையச் சொல்லனுமின்னா.. நாங்க ஸ்கூல் டிரிப் இல்லையின்னா கலேஜ் டிரிப் போகும் போது, பசங்க கை காட்டினா, பெருந்தன்மையா கை காட்டுற பொன்னுங்க இருக்கிற இடம் அது... சென்னயில இப்படி டிரிப போகும் போது, சத்தியபாமா கல்லூரி வண்டி எங்கள விரட்டி வந்து மிரட்டி சென்றது... நம்ம பொன்னுங்க ஒவர் சென்சிடீவ்...

சொன்னது...

காம்ப்ளான் பாய்,

முன்னமே சொல்லியிருந்தீர்கள் என்றால் டிரை செய்து பார்த்திருக்கலாம். :(

சொன்னது...

//நடித்திருந்தவர் தான் இந்த சிவராஜ்குமார்//
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியல. நம்ம ஊரையே நெனைச்சுட்டு இருப்பீங்களோ? அவர்தான் இப்போ கன்னடத்துல சூப்பர் ஸ்டாரு.

சொன்னது...

//*கன்னடத்துல சூப்பர் ஸ்டாரு*//
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்... அவர் படங்கள் முன்னுரிமை தந்து ஓட வைக்கப்படுகின்றன...
அங்க ஒரு பாசக்கார் குடும்பம், சினிமாவ குத்தகைக்கு எடுத்து இருக்காங்க..

//*முன்னமே சொல்லியிருந்தீர்கள் என்றால் டிரை செய்து பார்த்திருக்கலாம். :( *//
இப்போ என்ன..இன்னோர் டிரிப் போடுங்கள்... இல்ல ஒரு பதிவர் மீட் போடுங்கள்...

சொன்னது...

யானைப் படங்கள் போட்டிருக்கிறேன், இன்னும் இரண்டு நண்பர்களின் கேமரா படங்கள் வரவேண்டிய பாக்கியிருக்கிறது.

சொன்னது...

இளா, ஆள் சூப்பர்ஸ்டாரோ என்ன எழவோ தெரியாது. ஆனால் நல்ல மனிதராக தென்படுகிறார்.

காம்ப்ளான் பாய் - ஏன்யா நாங்க நல்லாயிருக்கிறது பிடிக்கலையா?

சொன்னது...

//இப்போ என்ன..இன்னோர் டிரிப் போடுங்கள்...//

நீங்க சொன்னதும் தான் நினைவில் வருது; ஆகஸ்ட் 10, அலப்பி போறோம். போட் ரேஸ் இருக்கில்லையா கேரளாவில் அதைப் பார்க்க.

கம்பெனி டூர் இது பஸ் ஒன்னு பிடிச்சு போறதா உத்தேசம் இப்போதைக்கு.

சொன்னது...

பார்த்து அலம்புங்க..அப்புறம் அடிய வாங்கிட்டு..என் பக்கம் கைய காட்டிராதீக
//*நீங்க சொன்னதும் தான் நினைவில் வருது; ஆகஸ்ட் 10, அலப்பி போறோம். போட் ரேஸ் இருக்கில்லையா கேரளாவில் அதைப் பார்க்க.

கம்பெனி டூர் இது பஸ் ஒன்னு பிடிச்சு போறதா உத்தேசம் இப்போதைக்கு. *//

சொன்னது...

படங்கள் அருமை , அதுவும் யானை சாலையில் நிற்கும் போது பைக்குகள் விளகெறிய நிற்பது அதிரடிப்படம். ஆனால் வாகன முகப்பொளி கண்டு யானை மிரண்டு எதுவும் ஏடாகூடம் செய்யவில்லையா?

நமக்கு இதெல்லாம் சந்தோஷம் ஆனால் யானைகள், வனவிலங்குகளுகு நம் வருகை தொந்தரவு தானே ,அவர்களின் இடத்தில் போய் நாம் அத்துமீறல் செய்கிறோம்!

சொன்னது...

உங்களுக்கு மலை ஏற்றம் பிடித்த ஒன்று தானே! எட கல் (தமிழில் இடைகல்) என்று ஒரு இடம் இருக்கிறதே, அங்கு சென்று வந்திருக்கலாமே!

யானையின் உண்மையான சுய ரூபம் தெரியாது, உங்கள் நண்பர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களை கேட்டுப்பாருங்கள், தெரியும்.

இளங்கன்று பயமறியாது என்பது இது தானோ!

சொன்னது...

வவ்வால், வெயிலான் நன்றிகள்.

வவ்வால் நிச்சயமாகத் தொந்தரவு தான். ஆனாலும் நாம் காட்டுக்குள் போவதில்லை காட்டைக் கடக்க போடப்பட்டிருந்த பாதைதான் அது வவ்வால்.

நீங்கள் பார்க்கலாம் ஒரு மாருதியும் நிற்பதை. ஆனால் நாங்கள்(நான் இல்லை) ஆனை பார்ப்பதற்காகத்தான் அங்கே அந்த நேரத்தில் சென்றோம் என்பது உண்மை :(

சொன்னது...

வெயிலான் யானையின்(காட்டு) சுயரூபம் தெரிந்ததால் தான் அந்த மக்களுக்கு அத்தனை சுவாரசியமே!

எடகல் எங்கிருக்கிறது?

அப்பாடி நீங்களாவது இளங்கன்றுன்னு சொன்னீங்களே!

சொன்னது...

Some of us then immediately started out walking for Edakkal caves, which contain 6000 year old rock carvings. While not breathtaking, it’s amazing to think that the local tribal people are a race that pre-date the dominant Dravidian people of south India (whose origin is unclear, let alone the origin of the tribals). There is also a carving that appears to be of Buddha, suggesting the cave was latterly used by Buddhists as they traveled through the south. I was then a little disappointed to be told we were walking to the top of the mountain (as I was looking forward to having a nice south Indian coffee on return to the hotel). But as a good leader, I did what I was told, and 30 mins of solid uphill walking later, we were staring out over what felt like the whole of north Kerala. Brian was good enough to assist a group of students reach the top, and then of course help them down from the top. Since lunch we have been resting – book reading, bird watching, Ayurvedic massage, and sleeping have all been enjoyed. Tomorrow we head west, over the ghats and down to the coast. The cool will be lost but the Arabian sea will be gained, which I think is a fair trade to make.

The Edakkal Caves in Wayanad are magnificent formations of nature. The word 'Edakkal' itself means 'a stone in between'. The structure of these caves is truly extraordinary as a big boulder balances itself on two relatively smaller boulders, thus forming the truly fascinating Edakkal Caves of Kerala. These caves are a very popular tourist attraction of Wayanad. The cave has two levels inside that can be entered through an entrance that is merely 5 feet in height.

The lower chamber is around 18 feet long and 10 feet high. A small passage from there leads to the upper chamber that is around 95 feet long and 18 feet high. This truly magnificent structure is a storehouse of pre-historic art forms. These etchings and carvings on the walls of the caves are truly fascinating as they date back to almost 5000 years. This attracts historians and archaeologists from all over the world. The Edakkal Caves have been the cradle of human civilization at different stages in history.

How to Reach Edakkal Caves

By Air
Located at a distance of 23 kilometers is the Karipur airport.

By Rail/ Train
The nearest railway station is located at a distance of 97 kilometers at Kozhikode.

By Road
The Edakkal Caves can be accessed easily from anywhere in Kerala and Wayanad as it is well connected by a wide network of roads.

http://www.mountainviewayurvedaretreat.com/pictures/PIC_17.JPG

http://www.edakkal.com/html/cottages.htm