தேவதைகளின் தேசம்
ஹோட்டலில் கொடுத்திருந்த கம்பளிக்குள் புகுந்து கொண்டு 12 மணிநேரம் கழித்துத்தான் எழுந்தேன். நண்பர்கள் கசகசவென்று பேசிக்கொண்டிருந்ததால் விழிப்பு வந்தாலும்; இப்படி அவர்கள் வெகுநேரமாய் பேசிக் கொண்டிருந்ததாய்ச் சொன்னார்கள். என்ன விஷயம் என்று கேட்டால் இவர்கள் மீண்டும் யானை பார்க்கப் போக, இந்த முறை யானைக் கூட்டத்தைப் புகைப்படம் எடுத்துவிட்டு வரும் வழியில் தனி யானை ஒன்று இவர்கள் துரத்தியதாகவும் அதனிடம் இருந்து தப்பித்து வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
பிறகு பார்த்தால் தான் தெரிகிறது இவர்கள் யானையை பேக்ரவுண்டாக வைத்து இன்னொரு ஃபார்மேஷனை புகைப்படம் எடுக்க நினைத்திருக்கிறார்கள். யானைக்கு கோபம் வந்திருக்க வேண்டும்; துரத்தோ துரத்தென்று துரத்தியிருக்கிறது இவர்களை. என்னுடன் அறையில் இருந்த நண்பர்கள் இருவர் ராயல் சேலஞ்சை அலாக்காக அடுத்துவிட்டு; பறவையினங்கள் ஒன்றிரண்டைக் கடித்து குதிறிப் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தான் நினைவில் வந்தது நேற்றிரவு இரவு உணவு சாப்பிடாதது. பின்னர் காலை உணவு சாப்பிட்டு விட்டு; பனாசுரா டேமிற்கு செல்லத் திட்டமிட்டோம்.
சுல்தான் பத்தேரியில் இருந்து சுமார் 30KM தூரத்தில் இருக்கிறது இந்த பனாசுரா டேம். இரண்டு மாதத்திற்கு முன்னால் அணையில் தண்ணீர் இல்லையென்று போட்டிங் சர்வீஸை நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அணை நிரம்பியிருக்கும் வேளையில் போட்கள் வேலை செய்யாததால் வெறும் புகைப்படங்கள் மட்டும் எடுத்துவிட்டுக் கிளம்பினோம். ஒரு நாள் முழுவதையுமே கூட அங்கே செலவிட விஷயங்கள் இருந்தாலும் இவர்களுடைய பயண முறை அங்கிருந்து வேகமாய் எங்களை நகரவைத்தது. பின்னர் திரும்பவும் சுல்தான் பத்தேரி வந்து மதிய உணவை முடித்துக் கொண்டு(சுமார் 4 மணி அளவில்) கேரளாவில் இருந்து கிளம்பினோம்.
மனம் முழுவதும் ரம்மியம் ஒட்டிக்கொண்டதைப் போன்ற ஒரு உணர்வு; அழகான ஊர் இன்னமும் இயற்கையை அழிக்காமல் மக்கள். கர்நாடக கேரள எல்லையைக் கடக்கும் பொழுது ஒரு விஷயம் புரிந்தது கிட்டத்தட்ட ஒன்றிரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் மக்கள் வெவ்வேறான மொழி பேசிக்கொண்டு; வித்தியாசமான அனுபவம். நிறைவான அனுபவங்களுடன் எங்கள் பயணம் மீண்டும் பெங்களூருவை நோக்கி பயணம். ஆறரை மணியில் இருந்து ஏழு, ஏழேகால் மணி வரை வண்டி ஓட்டுவது கடினம் இருட்டும் செட்டாகியிருக்காது வெளிச்சமும் இருக்காது. இந்த மக்களும் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் அவர்களுடைய வண்டி ஓட்டும் அனுபவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
வரும் வழியில் மைசூர் - பெங்களூர் சாலையில் Cafe Day ஒன்று உண்டு என்றும் அங்கே நிறுத்தி இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்றும் ப்ளான். அருமையான ரோடு மைசூர் - பெங்களூர் ஹைவே. இன்னொரு நாள் என்னுடைய கீர போண்டாவில் போகும் உத்தேசம் உள்ளது தனியாக.
Cafe Dayல் சாப்பிட உட்கார்ந்த பொழுது உள்ளே பரபரப்பு என்னவென்று பார்த்தால் யாரோ ஒரு செலிப்ரட்டி வந்திருந்தார். எங்களுக்கும் போஸ்டர்கள் பார்த்து முகம் தெரிந்தாலும் யாரென்று தெரியவில்லை; சும்மா போய் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் தான். கூட வந்த ஒரு தமிழ்நாட்டு நண்பர் அவரிடம் நேராய் சென்று "நீங்க செலிபிரட்டி என்று தெரிகிறது ஆனால் யாரென்று தெரியவில்லை. உங்களை இண்ட்ரொடியூஸ் செய்து கொள்ள முடியாமா எனக்கேட்க."
நபர் கொஞ்சமும் முகம் சுணுங்காமல்,
"நான் சிவராஜ்குமார் ராஜ்குமாரின் பையன்" என்று அறிமுகப்படுத்துக் கொண்டார். நம்மூரில் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படம் ஒன்று வந்ததில்லையா அது உண்மையில் கன்னட படம் ஜோகி. கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆன படம் அது; அதில் நடித்திருந்தவர் தான் இந்த சிவராஜ்குமார். பின்னர் இரண்டு ஸ்நாப்ஸ் எடுத்துக் கொண்டு அவருடைய பிரைவசியை ரொம்பவும் டிஸ்டர்ப் செய்யாமல் நகர்ந்து விட்டோம்.
மனுஷர் ரொம்பவும் கூல், நீங்க எல்லாம் எந்த ஊரு என்று கேட்டவர் மெட்ராஸ் என்று நண்பர் சொன்னதும் ப்ராப்பர் மெட்ராஸா என்று கேட்டார். ஏனென்றால் பொதுவாக நார்த் இண்டியாவில் தமிழ்நாட்டில் இருந்து வந்தாலே மெட்ராஸ் என்று சொல்லும் பழக்கம் உண்டு. உடனே நண்பர் ஆமாம் ப்ராப்பர் மெட்ராஸ் தான் என்று சொல்ல, நானும் பார்ன் அண்ட் ப்ராட்டப் இன் மெட்ராஸ் தான்; கோடம்பாக்கம் என்று சொல்லி எங்கள் பயணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். நம்மூரில் பச்சா பசங்க எல்லாம் படம் காண்பிக்கும் பொழுது சிவராஜ்குமார் எந்த வித பந்தாவும் இல்லாமல் நடந்து கொண்டது வியப்பாயிருந்தது. பெரும்பாலும் Cafe Dayல் யாரும் அவரை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும் அவரைப் பற்றி தெரிந்துதான் இருந்தது. பின்னர் சிக்கன் பர்கர், கோல்ட் காப்பி குடித்துவிட்டு பெங்களூர் வந்த பொழுது மணி இரவு 1.00.
------------------------------------
கேமெரா கண்களில் பதிவு செய்யாவிட்டாலும் மனதில் பதிவாகியிருந்தார்கள் கேரள பெண்கள். கேரளா கடவுளின் தேசம் மட்டுமல்ல தேவதைகளின் தேசமும் தான் ;-)
இந்தப் பயணத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய ஜல்லிக் குறிப்பு - கடவுளின் தேசம்
இன்னும் நிறைய படங்கள் - Wayanad photos
முந்தைய பகுதி - Tour de Wayanad