Monday, June 25, 2007

முத்தத்தி பயணம்

சனிக்கிழமை இரவு பத்துமணிக்கு தொலைபேசினார் நண்பர், xBhp என்ற டூவீலர் க்ரூப். தங்களுடைய நான்காண்டு நிறைவுவிழாவை கொண்டாட முத்தத்தி செல்வதாகவும் வருவதாகயிருந்தால் வரலாம் என்றும் என்னைக் கேட்க, சொல்லவும் வேண்டுமா சரியென்று சொல்லி கிளம்பினேன்.

ஞாயிறு காலை 5.45ற்கு பெங்களூர், "மெட்ரோ" அருகே அஸம்பிள் பாய்ண்டிற்கு வந்த பொழுது ஒருவர் மட்டும் தான் நின்று கொண்டிருந்தார். பின்னர் அடுத்த 15 நிமிடத்தில் மீதி நண்பர்களும் வந்துவிட மொத்தம் ஒன்பது பைக்களில் பயணம் தொடங்கியது, இரண்டு Comet 250 CC, மூன்று கரீஸ்மா 223 CC, மூன்று பல்ஸர் இரண்டு 150CC ஒரு 180 CC, அப்புறம் நம்ம ராயல் என்பீல்ட் 350 CC எல்லாம் கிளம்பினோம். இதில் வந்த அனைவருக்கும் ஸ்போர்ட்ஸ் பைக் மீது இருக்கும் காதல் அவர்களுடைய பேச்சுவார்த்தைகளிலேயே தெரிந்தது.

வெறும் அதைப் பற்றிய பேச்சுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், எனக்கு பயணங்களின் மீது காதல் இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் பைக் பற்றிய புரிதல்கள் நிறைய இல்லாததால் ஆரம்பத்தில் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது பின்னர் அதுவும் சரியானது. கனஹப்புராவிற்கு முன்னரே காலை ப்ரேக் பாஸ்ட்டை முடித்துவிட்டு, போவது காடென்பதால் மதிய உணவிற்கும் அங்கேயே பார்சல் செய்து கொண்டு புறப்பட்டோம்.

கனஹப்புரா வரை பாதை ஒன்றும் பிரச்சனையில்லை, அங்கேயிருந்து முத்தத்திக்கு கொஞ்சம் முன்வரை அதாவது 20 KM முன்வரை ஓரளவிற்கு பாதை இருந்தது. ஆனால் அந்த 20KM டிராவல் சூப்பரோ சூப்பர், காவேரி ஒரு பக்கம் ஓடிவர இன்னொரு பக்கம் காட்டுப்பாதையில் இந்த ஒன்பது பைக்களின் அணிவகுப்பு.

பின்னர் முத்தத்தியில் இறங்கி பிரம்மாதமான காவேரி நீரில் குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு மதிய உணவு சாப்பிட்டோம். பின்னர் சங்கமம் என்று ஒரு இடம் அருகில் இருப்பதாகவும் அங்கே செல்லலாம் என்றும் ப்ளான் இருந்தது ஆனால் அந்த இடம் கும்பல் அதிகமாகயிருக்கும் என்பதால் ப்ளானை மாற்றி அங்கே போகவில்லை, முத்தத்தியில் இருந்து மீண்டும் கனஹப்புரா வரும் வழியில் இருந்த இன்னொரு இடத்தில் நிறுத்தி கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு மீண்டும் பெங்களூர் கிளம்பினோம்.

பெங்களூர் வந்ததும் பலத்த மழை கொட்டியது. ஏற்கனவே நெகிழ்ந்திருந்த உள்ளத்தைப் போல் உடலும் நெகிழ்ந்தது மழையால். நாங்கள் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது போடுகிறேன் மற்றவை வந்ததும் அவற்றையும் போடுகிறேன்.

11 மறுமொழிகள்:

சொன்னது...

பைக் எல்லாம் மொட்டையாக நிற்கிறது.
:-))
படங்கள் அருமை.

சொன்னது...

பைக் பக்கத்தில் நாங்க இருக்கும் போட்டோவும் உள்ளதில்லையா?

ஆனால் மொட்டையா நிக்கிறதுதான் இன்னும் அழகாயிருக்கு.

சொன்னது...

சொல்லிருந்தா நாங்களும் வந்திருப்போமில்ல

சொன்னது...

எனக்கே கடைசிவரைக்கும் சொல்லலை என்பதுதான் உண்மை

சொன்னது...

சரி அது கெடக்கட்டும் எந்த மெட்ரோ சொல்லுதீரு ? யஸ்வந்தபுரம் மெட்ரோவா ?

சொன்னது...

அதிக மனித நடமாட்டம் இல்லாத இடங்கள்தான் இன்னமும் கொஞ்சமாவது மாசுபடாமல் இப்படி அழகா இருக்கு. கொஞ்சம் கொஞ்சமா மக்கள் போக ஆரம்பிச்சுட்டா அவ்ளோதான், இரண்டே வருடத்தில் இந்த இயற்கை எழில் சொட்டும் இடங்கள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைமேடா ஆயிடும்.

படங்கள் ரொம்பவே அருமையா இருக்கு. அதிலும் நதிக்கரையில் எல்லா மோட்டார் சைக்கிள்களும் நிற்கும் படம், ஹ்ம்ம்.... நமக்குத்தான் சைக்கிளே ஒட்டத்தெரியாதே...

சொன்னது...

ஜீவ்ஸ், அது ஜேபி நகர் பக்கத்தில் இருக்கும் மெட்ரோ. உண்மையில் மெட்ரோ(ரயில்) கிடையாது. கம்பெனியின் பெயர் என்று நினைக்கிறேன் மீட்டிங் பாய்ண்ட். அவ்வளவே.

சொன்னது...

லக்ஷ்மி உண்மை,

ஆனால் என்னுடைய நண்பர்களிடம் பார்த்திருக்கிறேன், அவர்கள் எவருமே ஒரு ப்ளாஸ்டிக் பேப்பர்களையோ இல்லை காலி வாட்டர் பாட்டில்களையோ அங்கே போடுவதில்லை.

இந்த முறையும் கூட நாங்கள் குப்பைகளையும் திரும்ப கொண்டுவந்தோம். இந்த பழக்கவழக்கங்கள் சற்று இந்தியாவில் மாறத்தொடங்கியிருக்கின்றன.

சொன்னது...

அப்படியெனில் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயமே மோகனா.

சொன்னது...

பெருமைக்காக சொல்றேன்னு நினைச்சாலும் நினைச்சிக்கங்க, சாஃப்ட்வேர் மக்கள் நிறைய பேரிடம் இதைப் பார்த்திருக்கிறேன்.

முன்னர் புனேவில் இருக்கும் பொழுதும் சரி, இப்பொழுது பெங்களூரில் இருக்கும் பொழுதும் சரி பயணக் குப்பைகளை, அந்த இடத்தில் விட்டுவருவதில்லை என்று வைத்திருக்கிறோம்.

சொன்னது...

ஓ. சரி..

//மோகன்தாஸ் சொன்னது...

ஜீவ்ஸ், அது ஜேபி நகர் பக்கத்தில் இருக்கும் மெட்ரோ. உண்மையில் மெட்ரோ(ரயில்) கிடையாது. கம்பெனியின் பெயர் என்று நினைக்கிறேன் மீட்டிங் பாய்ண்ட். அவ்வளவே.
//


மெட்ரோ பெங்களூரில் இருக்கிற ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். பெங்களூர்ல ரெண்டு இடத்துல மட்டும் இருக்கு. கார்டு வச்சிருக்கவங்களுக்கு மட்டும் அனுமதி ( காஸ்ட்கோ மாதிரின்னு வச்சுக்கோங்க ). நிறைய பொருள்கள் கிடைக்கும். என்னிடம் கார்டு இருக்கிறது.