Wednesday, June 27, 2007

என் டிரெக்கிங் அனுபவங்கள் - கலவாரஹல்லி பெட்டா

நீங்கள் பயணம் செய்வதில் விருப்பம் உடையவரா என்ற கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும். பயணம் செய்வதில் விருப்பம் என்பது எதைப் பொறுத்து இருக்க வேண்டும் பணத்தைப் பொறுத்தா மனதைப் பொறுத்தா? நிச்சயமாக நகைகள் வாங்கிக் குமிக்காமல் செலவு செய்து உலகச் சுற்றுப் பயணம் செய்யும் நபர்களை குறை சொல்லவில்லை. ஆனாலும் பயணம் மனதைப் பொறுத்து இருக்க வேண்டும்; நல்ல உதாரணம் ட்ரெக்கிங் செய்வது.

நீங்கள் 1,50,000 ரூபாய்கள் வைத்திருந்தால் உலகத்தின் மூலைகளுக்குச் சென்று மீள முடியும். அங்கேயும் கொஞ்சம் செலவு செய்தால் முக்கிய இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்குச் செல்லமுடியும். விலை உயர்ந்த காமிரா கைகளில் வைத்திருந்தால் அழகான போட்டோக்கள் எடுக்க முடியும். ஆனால் ட்ரெக்கிங் செய்வது வித்தியாசமாகயிருக்கும், உங்களின் உடலும் மனமும் ஒருமித்து ஒத்துழைத்தால் தான் டிரெக்கிங் செய்யமுடியும். வேண்டுமானால் ஒன்றிரண்டு தடவைகள் உங்களால் நண்பர்களுக்கு படம் காண்பிப்பதற்காக டிரெக்கிங் செய்ய முடியும். முழுவதுமாக பயணம் செய்யும் ஆர்வமிருந்தால் டிரெக்கிங் அற்புதமான ஒரு விஷயம் என்பது புரிபடும்.

இப்படித்தான் நாங்கள் சமீபத்தில் டிரெக்கிங் செய்த ஒரு இடம், அந்த இடத்தில் போட்டோக்களைப் பார்த்ததில் இருந்தே எங்கள் க்ரூப்பிற்கு அந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஆனால் விண்டரில் சென்றால் தான் நன்றாகயிருக்கும் என்று கேள்விப்பட்டதால் ஒரு வாரம் பொறுத்திருந்தனர் பின்னர் பரவாயில்லாமல் இருந்த ஒரு மழை வாரத்திற்குப் பிறகு நாங்கள் டிரெக் செய்த இடம் தான் கலவரஹல்லி பெட்டா.


இந்தப் படங்களைப் பார்த்து நாங்கள் விழுந்தோம, எங்களுடைய சொந்தப் படம் இல்லை என்பதால் மறைத்திருக்கிறேன்.சாஃப்ட்வேர் மக்களிடம் IST பற்றி கேட்டால் நன்றாகச் சொல்வார்கள் விளக்கம், ஆனால் 4.30 பெங்களூரில் இருந்து கிளம்புவோம் என்ற ப்ளான் போட்டதும் நிறைய பேர் வரமாட்டார்கள் என்று தான் எங்கள் கம்பெனியிலேயே பலர் நினைத்தார்கள். ஆனால் சரியாக 4.30க்கு பெங்களூரில் இருந்து கிளம்பினோம். இங்கிருந்து சுமார் 70 KM ஹைதராபாத் ரோட்டில் உள்ளது கலவாரஹல்லி. கீழிருந்து எங்களுக்கு இரண்டு மணிநேரம் பிடித்தது மழை உச்சியை அடைய, படிக்கட்டுக்கள் எல்லாம் கிடையாது மலையில் மீது இருக்கும் நடைபாதையில் தான் ஏறவேண்டும். கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது முதல் முறையாக ட்ரெக் செய்த சில நண்பர்களுக்கு.

ஆனால் மலை உச்சி, அத்தனை கடினமான வழியை கடந்துவந்ததற்கான பலனாக காட்சியளித்தது. ஆளாளுக்கு ஒரு மூட்டை சாப்பாடு(ஸ்நாக்ஸ், ட்ரிங்க்ஸ்(கூல்), பழங்கள்) கட்டிக்கொண்டு மேலேறியதால் நன்றாக சாப்பிட்டு என்ஜாய் செய்துவிட்டு கீழிறங்கினோம். நீங்கள் பெங்களூரில் இருக்கிறீரா? winter ல் செல்லக்கூடிய மிக அழகான ஒரு இடம் கலவாரஹல்லி, மூன்லைட் ட்ரெக்கிங் செய்வதாக இப்போதே உத்தேசித்து விண்டருக்காக காத்திருக்கிறோம்.

ஒரு வீடியோ சில புகைப்படங்கள். வீடியோ பற்றி சில வரிகள்

வீடியோவில் இருக்கும் நபர் முதல் முறையாக ட்ரெக்கிங் செய்பவர். அதனால் ஆரம்பத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டார் பின்னர் ஓவர் Enthu வாகி தலைவர் தான் முதலில் சென்றார். நண்பர்கள் இடையில் எங்கேயோ மறைத்து வைத்திருந்த உற்சாக பானம் சாப்பிட்ட பிறகு தான் அப்படி ஆனார் என்று சொல்லி வம்பிழுதார்கள். ஆனால் ஸ்ட்ரிக்ட்டா "ஹாட் டிர்ங்க்ஸ்" அலவ்ட் கிடையாது.பாதை முழுவதும் இத்தனை கஷ்டம் இல்லையென்றாலும் அந்த இடம் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
2 மறுமொழிகள்:

சொன்னது...

அழகான படங்கள்.

சொன்னது...

நன்றிகள் லொடுக்கு, எல்லா படங்கள் ஹை ரெஸல்யூஷன் படங்கள். என்னுடைய வசதிக்காக ரெஸல்யூஷன் குறைத்திருக்கிறேன்.